/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சேர்வலார் கோயிலில் 25ம் தேதி கொடை விழாசேர்வலார் கோயிலில் 25ம் தேதி கொடை விழா
சேர்வலார் கோயிலில் 25ம் தேதி கொடை விழா
சேர்வலார் கோயிலில் 25ம் தேதி கொடை விழா
சேர்வலார் கோயிலில் 25ம் தேதி கொடை விழா
விக்கிரமசிங்கபுரம்:சேர்வலார் சங்கிலி பூதத்தார், காந்தாரி அம்மன் கோயில் கொடை விழா வரும் 25ம் தேதி நடக்கிறது.சேர்வலார் சங்கிலி பூதத்தார், காந்தாரி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி கோயில் வளாகத்தில் கால்நாட்டு வைபவம் நடந்தது.
வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு சர்வசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து திருவீதி உலா வருதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு தீச்சட்டி எடுத்து வலம் வருதல், பொங்கலிடுதல், இரவு 9 மணிக்கு காந்தாரி அம்மனுக்கு கரக குடம் திருவீதி உலா வருதல், இரவு 12 மணிக்கு முழுக்காப்பு அலங்காரம், சாமக்கொடை அன்ன படப்பு, தீபாராதனை ஆகியன நடக்கிறது.26ம் தேதி காலை 8 மணிக்கு மேல் அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. வரும் ஜூன் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் சர்வசித்தி விநாயகர், சர்வசித்தி முருகன், மீனாட்சிசுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சேர்வலார் மின்வாரிய மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கல்யாணம், சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு சங்கிலி பூதத்தார், காந்தாரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு எட்டாம் பூஜை ஆகியன நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.